'அருவி'யின் அபாரமான ஓப்பனிங் வசூல் விபரம்

  • IndiaGlitz, [Monday,December 18 2017]

100 வருட தமிழ் சினிமாவில் குறிஞ்சிப்பூ போன்று அனைவரும் போற்றும் வகையில் ஒரு படம் உருவாகுவது அபூர்வமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் ஒரு படம் தான் 'அருவி' இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட நபரோ, ஊடகமோ இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் தரவில்லை என்பதில் இருந்தே இந்த படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை தெரிந்து கொள்ளலாம்

இந்த படத்தை படம் பார்த்தவர்களே சமூக வலைத்தளங்களில் பரப்பிய பாசிட்டிவ் விமர்சனங்கள் இந்த படத்தின் மிகப்பெரிய வசூலுக்கு உதவியாக இருந்துள்ளது. குறிப்பாக சென்னையில் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் எதிர்ப்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது என்பதும் ஹீரோ வேல்யூ இல்லாத ஒரு படத்திற்கு திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் இருந்தது ஆச்சரியப்படத்தக்க ஒரு அம்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது

சென்னையில் இந்த படம் கடந்த வாரயிறுதி நாட்களில் 16 திரையரங்குகளில் 132 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.59,21,528 வசூல் செய்துள்ளது ஒரு சின்ன பட்ஜெட் படத்திற்கு இந்த வசூல் மிகப்பெரிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது