பிக்பாஸ் பிரதீப் நடித்த 2 படங்களின் இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,March 09 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு பாதியில் வெளியேற்றப்பட்ட பிரதீப் அந்தோணியை வைத்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் தற்போது மூன்றாவது படத்திற்கு தயாராகி உள்ளார். அவர் இயக்க உள்ள அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது

தமிழ் சினிமாவின் தரமான படம் என்று அனைவராலும் போற்றப்படும் படங்களில் ஒன்று தான் ’அருவி’. இந்த படத்தின் இயக்குனர் அருண் பிரபா என்பதும் இந்த படத்தில் அதிதி பாலன், பிரதீப் ஆண்டனி, கவிதா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள் என்பதும் இந்த படம் சமூகத்தில் சந்திக்கும் சவால்களை எடுத்துரைக்கும் அருமையான படம் என்று பாராட்டு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’அருவி’ வெற்றியை அடுத்து ‘வாழ்’ என்ற படத்தை அருண் பிரபா இயக்கினார் என்பதும் பிரதீப் ஆண்டனி முக்கிய இடத்தில் இருந்த இந்த படம் கமர்ஷியல் கதையம்சம் கொண்ட படமாக அமைந்திருந்தது

இந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது அருண் பிரபா மூன்றாவது படத்திற்கு தயாராகி வருகிறார். அவரது அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் பிரதீப் அந்தோணி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறி ஒரு சில லட்சங்களை முன்பணம் வாங்கியதாக தெரிவித்திருந்த நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஏதாவது ஒரு கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.