'அருவி' அதிதிபாலனா இது? ஆச்சரிய அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Monday,December 23 2019]

கடந்த 2017ஆம் ஆண்டு அருண் பிரபு இயக்கத்தில் உருவான ’அருவி’ என்ற திரைப்படத்தில் நடித்த அதிதிபாலனுக்கு வாழ்த்துக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே. எய்ட்ஸ் நோயாளியாகவும் ஒரு போல்டான பெண்ணாக அவர் நடித்த கேரக்டர் திரையுலகிலும் ரசிகர்கள் தரப்பிலும் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்தில் அவருடைய நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லலாம். மேலும் இந்த படம் அவருக்கு ஒரு சில விருதுகளையும் பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கவர்ச்சியை நம்பாமல் தனது நடிப்பை மட்டுமே அவர் முழுமையாக நம்பியதால் அருவி’ படத்திற்கு பின் அவருக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் அதிதி பாலன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் கலந்து கொண்ட போது அணிந்திருந்த கவர்ச்சியான உடை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அருவி படத்தில் பார்த்த அதிதிபாலனா? என்று ரசிகர்கள் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

இந்த நிலையில் அதிதிபாலன் தற்போது ‘படவேட்டு’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

17 வயது இளம்பெண் மரணத்தில் துப்பு: ஒரே நேரத்தில் இருவரை காதலித்தது அம்பலம்

வேலூரை அடுத்த அரியூர்க்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் திடீரென

மனைவியுடன் ஒரு மணி நேரம் போனில் பேசிய கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை!

அகமதாபாத் சென்ற மனைவியுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போனில் பேசிய கணவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தை

பிகினி உடை, பீச் ஊஞ்சல்:வைரலாகும் காஜல் சகோதரிகளின் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் காஜல்அகர்வால். இவர் அஜித்துடன் 'விவேகம்' விஜய்யுடன் 'ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் 'மாற்றான்' மற்றும்

பாடகியாக மாறிய அஜித் மகள்! வைரலாகும் வீடியோ

தல அஜித் மற்றும் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் ஆகிய இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்ததே. அஜித்தின் மனைவி ஷாலினி திருமணத்திற்கு

அரவிந்தசாமியின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்!

'துருவங்கள் பதினாறு' என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகையே திரும்ப வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன். ரகுமான் நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை