எனக்கு பல நுணுக்கங்களை கற்று கொடுத்தவர் நீங்கள்: பிரபல இயக்குனர் குறித்து அருண்விஜய்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக இருந்தாலும், சினிமாவின் பின்னணி இருந்தும் அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ திரைப்ப்படம் தான் நடிகர் அருண்விஜய்க்கு திருப்புமுனை படமாக அமைந்தது. அதன்பின்னர் ஹீரோ, வில்லன் என தமிழ், தெலுங்கு திரையுலகில் அருண்விஜய் அசத்தி வருகிறார்.
இந்த நிலையில் அருண்விஜய் நடித்த ‘பாண்டவர் பூமி’ என்ற படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தளத்தில், ‘இன்று பாண்டவர் பூமி சன் தொலைக்காட்சியில். உங்கள் பெயரை இந்த சினிமா உச்சரிக்க ஆரம்பித்த முதல் படம் என நினைக்கிறேன். உங்கள் தன்னம்பிக்கையும் முயற்சியுமே உங்கள் பலம்.. இன்னும் நெடுந்தூரம் போங்கள். பார்த்து ரசிக்கிறேன். நீங்கள் கடந்த பாண்டவர் பூமி எனும் மைல்கல்லில் அமர்ந்தபடி. நன்றி’ என்று குறிப்பிட்டு வாழ்த்தியிருந்தார்.
இயக்குனர் சேரனின் வாழ்த்து குறித்து பதிலளித்த நடிகர் அருண்விஜய், ‘என்றும் என் நினைவில் மறவாத ஒரு மைல்கல்- பாண்டவர் பூமி! அதன் மூலம் பல நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் நீங்கள். நேற்றுதான் படப்பிடிப்பு நிறைவு பெற்றது போல் உள்ளது. உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி. செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது!! என்று குறிப்பிட்டுள்ளார். சேரன் மற்றும் அருண்விஜய்யின் இந்த டுவிட்டுக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
என்றும் என் நினைவில் மறவாத ஒரு மைல்கல்- பாண்டவர் பூமி! அதன் மூலம் பல நுணுக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தவர் நீங்கள். நேற்றுதான் படப்பிடிப்பு நிறைவு பெற்றது போல் உள்ளது. உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி..??
— ArunVijay (@arunvijayno1) May 27, 2020
செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது!! https://t.co/tbE3BPoayz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com