'செக்க சிவந்த வானம்': தியாகு கேரக்டரில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,August 14 2018]

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தில் நான்கு முன்னணி நடிகர்களான அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி மற்றும் அருண்விஜய் ஆகியோர்கள் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நான்கு நடிகர்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகரின் கேரக்டர் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நடிகர் அரவிந்த்சாமி, 'வரதன்' என்ற கேரக்டரில் நடித்துள்ளதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் நடிகர் அருண்விஜய், 'தியாகு' என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அருண்விஜய்யின் புதிய ஸ்டில் ஒன்றும் வெளியாகியுள்ளது.

அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதிராவ் ஹைத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.