'ஒரு குட்டிக்கதை' பாடலை எழுதியவர் பிரபல இயக்குனரா?

  • IndiaGlitz, [Thursday,February 13 2020]

விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டது என்பதும் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.

'ஒரு குட்டி கதை’ என்று தொடங்கும் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்ய, தளபதி விஜய் இந்த பாடலை பாடியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பாடலை எழுதியவர் யார் என்ற கேள்வி தற்போது அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. படக்குழுவினர் இதுகுறித்து கொடுத்த க்ளுவின் அடிப்படையில் இந்த பாடலை அருண்ராஜா காமராஜா தான் எழுதியிருப்பார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்.

அருண்ராஜா காமராஜா ஏற்கனவே விஜய் நடித்த ’பைரவா’ படத்தில் இடம்பெற்ற ‘வர்லாம் வர்லாம் வா’ என்ற பாடலை எழுதியிருந்தார் என்பதும் இவர் ‘கனா’ என்ற வெற்றி படத்தை இயக்கியவர் என்பதும் ‘தளபதி 65’ படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இவரது பெயரும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.