'விவேகம்' விமர்சனங்கள் குறித்து அருண்காமராஜ் கூறியது என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,August 30 2017]
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்திற்கு மிக அதிக அளவில் எதிர்மறை விமர்சனம் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் இதுகுறித்து கருத்து கூறி வந்ததை பார்த்தோம். இந்த நிலையில் பிரபல பாடகர், பாடலாசிரியர் அருண்காமராஜ் இதுகுறித்து கூறியதாவது:
விமர்சனம் செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்று தெரிந்துள்ளதால் அவர்கள் முதலில் படம் எடுத்து அதை விநியோகம் செய்து தியேட்டரில் ரிலீஸ் செய்து வெற்றி பெற்ற பின்னர் அடுத்தவர் படங்களை விமர்சனம் செய்யுங்கள்
இதுபோன்று வேண்டுமென்றே எதிர்மறை விமர்சனம் செய்பவர்களுக்கு எந்தவித பதிலும் கூற வேண்டிய அவசியம் இல்லை. நாம் பதில் கூறினால் அவர்களை மதிப்பதாக அர்த்தம் ஆகிவிடும். ஒரு படம் வெற்றியா? தோல்வியா? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். மக்களுக்கு பிடித்திருந்தால் படம் பார்ப்பார்கள், பிடிக்கவில்லை என்றால் பார்க்க மாட்டார்கள்.
இந்த விஷயத்தில் விஜய், அஜித் இருவருமே தங்களுடைய ரசிகர்களுக்கும், மக்களுக்கும் பிடிக்கும் வகையில் படமெடுப்பதைத்தான் விரும்புகின்றனர். அதையும் மீறி சில படங்கள் எதிர்பார்ப்பை மீறி தோல்வி அடைந்துவிடுகின்றன. உலகத்தில் எந்த ஒரு இயக்குனரும், எந்த ஒரு நடிகரும் தோல்வியே அடையாமல் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்ததாக வரலாறு இல்லை.
இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் விமர்சனம் போட்டு அதில் வரும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பவர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களை திணித்து விமர்சனம் செய்ய கூடாது, அது ரொம்ப தவறு' என்று அருண்காமராஜ் கூறினார்.