அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகில் பாடதராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த ’கனா’ திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடிகாக ஒரு வெப்தொடரை இயக்கவுள்ளார்.
இந்த வெப்தொடரின் நாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக தன்யா ஹோப் நடிக்கவுள்ளனர். சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த தொடருக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
‘லேபிள்’ என்ற டைட்டிலுடன் இந்த வெப்தொடரின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது என்பதும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் இந்த வெப் தொடர் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
We are excited to announce the next #HotstarSpecials #WebSeries #Label with Director @Arunrajakamaraj & @Actor_Jai #Disneyplushotstar #ComingSoon @muthamizh777 @TanyaHope_offl @Actor_Mahendran @keeperharish @SamCSmusic pic.twitter.com/NwjDl2LCdM
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) March 23, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments