அரைமணி நேரத்துல பாட்டு எழுதினேன் - அருண் ராஜா காமராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திலிருந்து "Kaavaalaa" என்ற பாடல் வெளியாகி பெரிய ஹிட் ஆனது. இந்த பாடலை எழுதிய அருண் ராஜா காமராஜ் நமக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தார். அப்போது அருண் ராஜா காமராஜ் அவர்களிடம் இந்த Kaavaalaa பாடல் உருவான விதம் எப்படி இருந்தது ? என்று கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு அருண் ராஜா காமராஜ் அவர்கள் " அனிருத் நடனம் சார்ந்த ஒரு பாடலுக்கு பாட்டு எழுத வேண்டும் என்று கூறினார் பின்னர் அதில் கொஞ்சம் தெலுங்கு வார்த்தைகள் கலந்து எழுத வேண்டும் என்று கூறினார் நான் அதற்கு ஏற்றார் போல் எழுதி கொடுத்தேன், வரிகள் மிகவும் நன்றாக இருந்ததாக அனிருத் தெரிவித்தார் ". என்று கூறினார். பின் naa ready மற்றும் Kaavaalaa இந்த இரண்டு பாடல்களில் எந்த பாடல் நன்றாக உள்ளது ? என்று கேட்கப்பட்டது .அதற்கு அருண் ராஜா காமராஜ் அவர்கள் " இரண்டு பாடலுமே நன்றாக உள்ளது, இரண்டு பாடலுமே எனக்கு பிடித்துள்ளது" என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Navin Madhesh
Contact at support@indiaglitz.com