அய்யா யார்? ஜெய் நீதிபதி ஆனாரா? 'லேபிள்' வெப்தொடரின் கடைசி எபிசோடு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவான ‘லேபிள்’ என்ற வெப் தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் 10வது கடைசி எபிசோடு இந்த வாரம் வெளியாகியுள்ள நிலையில் அதில் இந்த ஒன்பது வாரத்தில் சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டிருந்த ’அய்யா’ என்பது யார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஜெய் நீதிபதி ஆவதற்கு பல்வேறு தடைகள் இருந்த நிலையில் அவர் நீதிபதி ஆனாரா? என்ற கேள்விக்கும் இந்த எபிசோடில் விடை கிடைத்துள்ளது.
வடசென்னையில் உள்ள இரண்டு பிரபலமான லேபிள்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஒரு குரூப்பை இன்னொரு குரூப் போட்டு தள்ளிக் கொண்டே வந்தது. குறிப்பாக பாதாளம் குரூப்பை அய்யா குரூப் போட்டு தள்ளி கொண்டு வந்த நிலையில் பாதாளத்தை வீரா மற்றும் குமார் ஆகிய இருவரும் போட்டுத்தள்ளி அய்யா குரூப்பில் பிரபலமானார்கள்.
வீரா, குமார் ஆகிய இருவரையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்று ஜெய் தீவிர முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் திடீர் வீரா, குமாரை சொந்த குரூப்பினர்களே போட்டுத்தள்ள முயற்சித்தனர்.
இந்த நிலையில் அனைத்திற்கும் காரணம் ’அய்யா’ என்பது ஜெய்க்கு தெரிய வந்தது. தலைமறைவாக இருந்து அனைத்து கிரிமினல்களையும் செய்து வரும் அவரை வெளியே வர வைக்க அவர் மீது 167 வழக்குகளை ஜெய் பதிவு செய்த நிலையில் இந்த எபிசோட்டில் அவர் வெளியே வந்துள்ளார். எனவே பார்வையாளர்களுக்கு ’அய்யா’ என்பது யார் என தெரிய வந்துள்ளதை அடுத்து பார்வையாளர்களுக்கு கடந்த 9 வாரமாக இருந்த சஸ்பென்ஸ் நீங்கி உள்ளது.
அதேபோல் ஜெய் நீதிபதி ஆவதற்கு உண்டான தடைகளும் உடைக்கப்பட்டு அவர் நீதிபதி நாற்காலியில் உட்காருவதுடன் இந்த தொடர் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout