கொரானா வைரஸை பாரதியாருடன் ஒப்பிட்ட குட்டிக்கதை பிரபலம்

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற குட்டிக்கதை என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த பாடலை இயக்குனரும் பாடகரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜர் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் தலைவிரித்து ஆடி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பதிவு ஒன்றை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இரண்டு புகைப்படங்களாக இருக்கும் இந்த பதிவு தற்போது பயனுள்ள வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகையே உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் இந்த புகைப்படங்களில் உள்ளன.

இந்த நிலையில் இந்த டுவீட்டில் ’சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியார் கூறினார். அதேபோல் எல்லா சாதிகளையும் சமமாக பார்க்கிறது ’மகாகவி கொரானா’ என்றும் அருண்ராஜா காமராஜ் குறிப்பிட்டிருந்தார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.