அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' இடித்து தரைமட்டம்?
- IndiaGlitz, [Monday,October 05 2015]
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான அருள்நிதியின் 'டிமாண்டி காலனி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள டிமாண்டி காலனியில் தற்போதும் பேய் நடமாட்டம் இருந்து வருவதாக வதந்திகள் ஏற்பட்டு வருகிறது. இந்த வதந்தியை அடிப்படையாக கொண்டுதான் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காலனியில் இதற்கு முன்னர் வசித்தவர்கள் மற்றும் ஒருசில ரியல் எஸ்டேட் வியாபாரிகள் 186 கிரவுண்ட் அளவு கொண்ட இந்த டிமாண்டி காலனியை கைப்பற்ற திட்டம்போட்டே இந்த வதந்தியை பரப்பியதாக கூறப்படுவதுண்டு
இந்நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று டிமான்டி காலனியை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். இந்த இடத்தை நிர்வகித்து வரும் சென்னை-மயிலாப்பூர் ஆர்ச் டயோசிஸ் நிர்வாகிகள் இதுகுறித்து கூறுகையில், "சுமார் 186 கிரவுண்ட் நிலம் கொண்ட டிமான்டி காலனி, ஆதரவற்ற குழந்தைகள், விதவைப் பெண்களை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இந்த சொத்தை கையாள்வதில் நிறைய குளறுபடிகள் நிலவி வருகின்றன. அவற்றை தீர்த்து முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினர்.
டிமாண்டி காலனி' திரைப்படம் வெளிவந்த நேரத்தில் பலர் இந்த காலனிக்கு வந்து பேய் பங்களாவை பார்த்துவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.