நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்: முதல்முறையாக இந்திய திரைப்படத்தில் பாடிய சங்கீத மேதை!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்தில் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக டிரைலர், பாடல்கள் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ’மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஆடியோ பாடல்களின் தொகுப்பு சற்று முன் வெளியாகி உள்ளது. அதில் ’சண்டை அலங்காரம்’ என்ற பாடலை பிரபல கர்நாடக சங்கீத மேதை அருணா சாய்ராம் அவர்கள் பாடியுள்ளார்
கர்நாடக சங்கீத மேதையும் பத்மஸ்ரீ விருதினை பெற்றவருமான அருணா சாய்ராம் அவர்கள் பல இந்திய மற்றும் சர்வதேச கர்நாடக இசை மேடைகளில் பாடி இருந்தும் இதுவரை எந்த திரைப்படத்திலும் அவர் பாடியதில்லை என்பதும், முதல் முதலாக இந்திய திரையுலகில் அதுவும் ஒரு தமிழ் திரைப்படத்தில் அவர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை பா விஜய் எழுதியுள்ளார் என்பதும் இதனை தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Blessed to have Aruna Sairam mam sung for the first time in any Indian film ???????????? https://t.co/tRqpYcn7le
— RJ Balaji (@RJ_Balaji) November 7, 2020
Blessed to have Aruna Sairam mam sung for the first time in any Indian film ???????????? https://t.co/tRqpYcn7le
— RJ Balaji (@RJ_Balaji) November 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout