சமூக விரோதிகளை அடையாளம் காட்டுங்கள்.. ரஜினிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் சம்மன்..!

தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான மக்கள், 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தடியடியில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களைப் பார்வையிடுவதற்காக, நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார்.

தூத்துக்குடி சென்றுவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததால்தான் வன்முறை ஏற்பட்டது. அதனால்தான் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது’ என்று தெரிவித்தார். இதற்கிடையில், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்ள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணை ஆணையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொண்டார்.

அவர், ‘பேரணியில் சமூக விரோதிகள் நுழைந்ததாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவருக்கு சமூக விரோதிகள் நுழைந்தது குறித்த தகவல்கள் தெரியும். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும்’ என்று கோரிக்கைவைத்திருந்தார். இந்நிலையில், அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக வரும் 25-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

More News

பிரபல தமிழ் நடிகையின் மெழுகுச்சிலை: நாளை சிங்கப்பூரில் திறப்பு விழா!

சிங்கப்பூரில் 'மேடம் துசாட்ஸ்' என்றா அருங்காட்சியகத்தில் உலகின் முக்கிய நபர்களின் மெழுகுச்சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மகாத்மா காந்தி,

மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனை: 4 உயிர்கள் பலியான பரிதாபம்!

மாமியார் மருமகள் இடையே கோலம் போடுவதில் ஏற்பட்ட சிறு சண்டை காரணமாக நான்கு உயிர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் ராணிப்பேட்டை அருகே நடந்துள்ளது

நடிகர் யோகிபாபுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் 'காக்டெயில்' என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த போஸ்டருக்கு ஒரு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது தெரிந்ததே

எல்.ஐ.சி பங்குகள் விற்கப்படுவது சாதாரண விஷயமல்ல.. மக்களின் பணத்தில் கை வைக்கிறது இந்த அரசு..! விவரிக்கும் ஊழியர்கள்.

"எங்களுக்குப் பிரச்னை வந்துவிடும் என்பது போல சொல்லப்படுகிறது. எங்களுக்கு எப்படியும் சம்பளம் வரத்தான் போகிறது. ஆனால், மக்கள் இந்த நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை சிதைந்துவிடும்".

தஞ்சை பெரிய கோவில் - ஆற்றங்கரை நாகரிகத்தின் வரலாற்றுச் சிறப்பு

வண்டல் மண்ணைத் தவிர சுற்றி வேறு எதையுமே காண முடியாத ஒரு ஊரில் இத்தனை பெரிய பிரம்மாண்டம்