close
Choose your channels

மகனுடன் ஆட்டோவில் சென்ற அருண்விஜய்.. இன்னிக்கு வீட்டுல செம்ம சமையல் போல..!

Monday, April 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அருண் விஜய் தனது மகனுடன் ஆட்டோவில் மீன் மார்க்கெட் சென்று மீன் வாங்கிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து ’இன்னிக்கு வீட்டில் செம்ம மீன் குழம்பு போல’ என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் நடிப்பில் உருவான ’மிஷின் சாப்டர் ஒன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் பாலா இயக்கத்தில் ’வணங்கான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடப்பட்டது.

ஏற்கனவே அவர் நடித்த ’பார்டர்’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும் இன்னும் சொல்ல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த நிலையில் கமலஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்திலும் அருண் விஜய் இணைய போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் ஆட்டோவில் சென்று மீன் வாங்கிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மீன் மார்க்கெட்டில் உள்ளவர்கள் மிகவும் எளிய வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அவர்கள் சக மக்களிடம் காட்டும் அன்பு ஆச்சரியமானது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment