முதல்முறையாக ஏவிஎம் தயாரிப்பில் அருண்விஜய்: நாளை டீசர் ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம்ஜிஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் நடிகர் அருண்விஜய் நடித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் ‘தமிழ் ராக்கர்ஸ். இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிகர் அருண்விஜய் நடித்து உள்ளதாகவும் இந்த தொடரின் டீசர் நாளை வெளியாக இருப்பதாகவும் ஏவிம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘முதல் முறையாக ஏவிஎம் தயாரிப்பில் நடித்தது தனக்கு மிகவும் பெருமை என்றும் அதுவும் எனது விருப்பத்துக்குரிய இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் ‘குற்றம் 23’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும், இந்த திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் அருண் விஜய் நடித்துள்ள ’தமிழ்ராக்கர்ஸ்’ வெப்தொடரின் நாயகியாக வாணிபோஜன் நடித்துள்ளார் என்பதும் இந்த வெப்தொடர் விரைவில் சோனி லைவ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
Really excited to be associated with @avmproductions for the first time and with my favorite director @dirarivazhagan sir... #TamilRockerz is going to be a one series you don't want to miss... ❤️ @arunaguhan_ @SonyLIV https://t.co/12AQPHrEXE
— ArunVijay (@arunvijayno1) July 2, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com