close
Choose your channels

ரோட்டுக்கடையில் ஆம்லேட் போட்ட பிரபல தமிழ் நடிகர்

Thursday, May 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அட்டகாசமாக தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி ஆனவர் நடிகர் அருண்விஜய். அதன் பின்னர் இவர் நடித்த 'குற்றம் 23' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர் 'தடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி பிரபாஸ் நடித்து வரும் 'சாஹோ' மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்க சிவந்த வானம்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அருண்விஜய் சமீபத்தில் வெளியூர் சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது சாலையோர ஹோட்டல் ஒன்றில் சாப்பிட சென்றார். ஆம்லேட் சாப்பிட விரும்பிய அருண்விஜய், பின்னர் அந்த ஓட்டல் உரிமையாளரின் அனுமதியை பெற்று அவரே தனக்குரிய ஆம்லேட்டை தயார் செய்தார்

ஓட்டலில் ஆம்லேட் மாஸ்டாராக மாறி அவரே தயாரித்த ஆம்லேட்டை சாப்பிட்ட பின்னர் மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். அருண்விஜய் ஆம்லேட் தயார் செய்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment