இன்று 4ஆம் நாள் சிகிச்சை.. காயம் குறித்து அருண்விஜய் வெளியிட்ட புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,February 07 2023]

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் சமீபத்தில் காயம் அடைந்த நிலையில் தற்போது அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் தற்போது ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் எமி ஜாக்சன் இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் படத்தில் ரீஎண்ட்ரி ஆகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள அருண்விஜய், ‘என் கால் முட்டில் ஏற்பட்ட காயத்திற்காக ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறேன், இது என்னுடைய நான்காவது நாள் சிகிச்சை, விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் குணமாகி படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அருண் விஜய் நடித்த ’பார்டர்’ திரைப்படம் ரிலீஸ்-க்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.