இரட்டை வேடத்தில் நடிக்கும் 'ரெட்ட தல' திரைப்படம்.. சூப்பர் அப்டேட் கொடுத்த அருண்விஜய்..!

  • IndiaGlitz, [Friday,June 07 2024]

அருண் விஜய் நடிக்கும் 36 வது திரைப்படமான ‘ரெட்ட தல’ படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது முன்னணி இடத்தை பிடித்துள்ள அருண் விஜய் நடித்து வரும் அடுத்த திரைப்படம் ‘ரெட்ட தல’. கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். ’தடம்’ திரைப்படத்திற்கு பிறகு அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகியாக சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அருண் விஜய் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் ஒரு சூப்பர் ஸ்டில் ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.