ஆர்யா,சூர்யா, விஷால் பாணியில் அருண்விஜய்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட்டில் தற்போது நடிகர்களே தயாரிப்பாளர்களாக மாறி வரும் வழக்கம் அதிகரித்து வருகிறது. சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ், ஆர்யா, விஜய் சேதுபதி, பிரபுதேவா உள்பட பல நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்கள் மற்றும் பிற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதியதாக இணைந்துள்ள நடிகர், சமீபத்தில் அஜீத் வில்லனாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய அருண்விஜய்.
"இன் சினிமா எண்டர்டெயின்மெண்ட்' (In Cinemas Entertainment) என்ற பெயரில் புதிய படக்கம்பெனியை தொடங்கியுள்ள அருண்விஜய் தனது நிறுவனத்தின் மூலம் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், திறமையிருந்தும் சாதிக்க வாய்ப்பிலாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகவே இந்த சினிமா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் 'தடையற தாக்க' தனக்கு ஒரு பிரேக் கொடுத்த படம் என்றும், அதன் பின்னர் கவுதம் மேனனின் 'என்னை அறிந்தால்' என்னை ரீ எண்ட்ரி செய்ய வைத்த படம் என்றும் கூறிய அருண்விஜய், 'கவுதம் மேனன் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் 'சிம்பு' படத்தை முடித்தவுடன் அவரது இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
அருண்விஜய் தற்போது 'வா டீல்' என்ற படத்தை முடித்துள்ளார். வரிவிலக்கு பெறுவதற்காக தற்போது இந்த படம் 'வா' என டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தை தவிர தெலுங்கில் ராம்சரண் தேஜா மற்றும் கன்னடத்தில் புனீத் ராஜ்குமார் நடிக்கும் படங்களிலும் முக்கிய கேரக்டரில் அருண்விஜய் நடித்து வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com