'பிகில்' படத்தை குடும்பத்துடன் பார்த்து பாராட்டிய பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,November 12 2019]

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகிய பிகில்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. வசூல் அளவிலும் விமர்சனங்கள் அளவிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தின் வசூல் ரூ.300 கோடியை நெருங்கி கொண்டிருப்பதாகவும், இன்னும் தமிழகத்தின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் பிகில் படத்தை சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு கோலிவுட் திரையுலக பிரபலங்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நேற்று பிகில்’ படத்தை தனது குடும்பத்துடன் பார்த்தார் நடிகர் அருண் விஜய்

இந்த படம் குறித்து நடிகர் அருண்விஜய் கூறியபோது, ‘நேற்றிரவு பிகில்’ படத்தை குடும்பத்துடன் பார்த்தேன். விஜய் அவர்கள் மிக அருமையாக நடித்துள்ளார். எமோஷன் காட்சிகளுடன் கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம். இந்த படத்தை குடும்பத்துடன் கண்டு மகிழ்ந்தேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் அருண்விஜய் தற்போது மாஃபியா, அக்னி சிறகுகள், பாக்சர் மற்றும் சினம் ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார் என்பதும் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தடம்’ மற்றும் ‘சாஹோ’ நல்ல வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது