'யானை' இந்தியில் எடுத்தால் இவர்தான் ஹீரோயின்: அருண்விஜய்

அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. அருண்விஜய் மற்றும் ஹரி ஆகிய இருவருக்குமே இந்த படம் ஒரு திருப்புமுனையை கொடுத்து உள்ளது என்பதும் தற்போது இருவருக்கும் அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’யானை’ திரைப்படத்தை ஹிந்தியில் உருவாக்க முடிவு செய்தால் இந்த படத்தை ரோஹித் ஷெட்டி தான் இயக்க வேண்டும் என்று அருண் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த படத்தை அவரை தவிர வேறு யார் இயக்கினாலும் நன்றாக இருக்காது என்றும் அவர் மிக அற்புதமான இயக்குனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நானே நடித்தால் எனக்கு ஜோடியாக ஷரதா கபூர் நடிக்க வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ’யானை’ படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அருண் விஜய் மற்றும் ஷரதா கபூர் ஆகிய இருவரும் பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.