சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் அருண்விஜய்?

  • IndiaGlitz, [Monday,December 28 2015]

நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற இயக்குனர் அல்போன்ஸ்புத்திரன் சமீபத்தில் இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் 'பிரேமம்'. இந்த படம் சென்னையில் 200 நாட்களுக்கும் மேல் ஓடி, தமிழ்ப்படங்களுக்கு இணையாக வசூலில் சாதனை புரிந்தது.


இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ்புத்திரன் தனது படத்திற்கான ஆரம்பகட்ட பணியை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த புதிய படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி அல்லது மோகன்லால் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இருவரில் ஒருவர் முடிவு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்க அருண்விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் அருண்விஜய்க்கு மார்க்கெட் ஏறியுள்ளதால் இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அருண்விஜய் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளாரா? என்பது குறித்து இன்னும் எவ்வித தகவலும் வெளிவரவில்லை. ஆனால் 'என்னை அறிந்தால்' படம் போலவே இந்த படமும் அருண்விஜய்க்கு நிச்சயம் நல்ல பெயரை வாங்கிக்கொடுக்கும் என்பதை மட்டும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

சிம்பு மீதான பீப் பாடல் வழக்கு திடீர் வாபஸ்

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

4 வருடத்திற்கு பின்னர் ரீ-எண்ட்ரி ஆகும் தனுஷ் பட இயக்குனர்

தனுஷ் நடித்த 'திருடா திருடி', 'சீடன்' உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் இயக்குனர் சுப்பிரமணிய சிவா...

2015-ல் தமிழ் சினிமாவின் வெற்றிப் படங்கள்

கடந்த வெள்ளியன்று வெளியான சூர்யாவின் 'பசங்க 2' மற்றும் ஜெயம் ரவியின் 'பூலோகம்' ஆகிய படங்களோடு சேர்த்து இந்த 2015ஆம் ஆண்டில் மொத்தம் 204 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்திய அளவில் அதிக படங்களை ரிலீஸ் செய்யும் தமிழ் சினிமா...

கேரளாவில் பிரபல தமிழ் நடிகை சென்ற கார் விபத்து

தலைநகரம், சபரி, பெரியார், நான் அவனில்லை, அறை எண் 305-ல் கடவுள், உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஜோதிர்மயி...

அஜீத்துக்கு ரஜினி தரும் பிறந்தநாள் பரிசு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது...