அருண்விஜய்யின் அடுத்த த்ரில் படத்தின் இயக்குனர்!

  • IndiaGlitz, [Saturday,September 07 2019]

இந்த ஆண்டு அருண்விஜய் நடித்த ‘தடம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அவர் தற்போது ‘அக்னி சிறகுகள்’, ‘பாக்ஸர்’ மற்றும் ‘மாஃபியா’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘மாஃபியா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அருண்விஜய் தனது டுவிட்டரில் தனது அடுத்த படம் முடிவாகிவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்தார். அதன்படி தற்போது இயக்குனர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் த்ரில் படத்தில் நடிக்க அருண்விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ‘நினைத்தாலே இனிக்கும்’, யுவன் யுவதி’ ‘ஹரிதாஸ்’ மற்றும் ‘வாகா’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அருண்விஜய் ‘குற்றம் 23’ படத்திற்கு பின் மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடிக்கின்றார். த்ரில் படமாக அமையவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இம்மாதம் தொடங்கவுள்ளது. கோபிநாத் ஒளிப்பதில் ஷபீர் இசையில் உருவாகவுள்ள இந்த படம் அருண்விஜய்யின் 30வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் தனது லுக் இதுவரை எந்த படத்திலும் இல்லாத வகையில் புதுவகையில் இருக்கும் என்றும் இந்த படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் அருண்விஜய் தெரிவித்துள்ளார். 
 

More News

இனிமேல் நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை: சனம் ஷெட்டியின் கண்ணீர் பேட்டி!

பிக்பாஸ் போட்டியாளர்களான தர்ஷன் மற்றும் ஷெரின் ஆகிய் இருவரும் நெருக்கமாக பழகி வந்தபோதிலும் இருவரும் நல்ல நண்பர்களாகவே பழகி வருகின்றனர். ஒருவரை ஒருவர் விரும்புவதாகவோ

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து!

'ரஜினி கட்சி தொடங்கி கட்சி கொடி, கொள்கைகளை அறிவித்த பிறகே அவரது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும்

தனுஷின் 'அசுரன்' படத்தின் சூப்பர் அப்டேட் அறிவிப்பு

தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில் எதிர்பாராத காரணத்தால் அந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உயிருடன் புதைக்கப்பட்ட அரியவகை மான்: அதிர்ச்சி வீடியோ

பீகார் மாநிலத்தில் நீலான் என்ற அரிய வகை மான், கூட்டம் கூட்டமாக வந்து விவசாயிகள் கஷ்டப்பட்டு பயிர் செய்த பயிர்களை நாசமாக்குவதாக வனத்துறையினர்களுக்கு புகார் வந்தது.

அபராதம் கேட்டதால் ஆத்திரம்: சொந்த பைக்கையே கொளுத்திய போதை ஆசாமி!

செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்தியாவின் பல மாநிலங்களில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது.