அருண் விஜய்யின் அடுத்த படத்தில் விஜய் பட நாயகி.. மாஸ் டைட்டில் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் நடித்த ’யானை’ மற்றும் ’சினம்’ ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும், அவர் நடித்த ‘பார்டர்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் அருண்விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அருண் விஜய் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தை இயக்கியிருப்பது பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய். இந்த படத்திற்கு ’அச்சம் என்பது இல்லையே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
இந்த படத்தில் நாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’தெறி’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் என்பவரும் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராஜசேகர் மற்றும் சுவாதி தயாரிப்பில் உருவாகும் த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை அருண்விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Really happy to collaborate with #DiriectorVijay for my next #AchamEnbathuIllayae alongside @iamAmyJackson, for a @gvprakash Musical!!
— ArunVijay (@arunvijayno1) October 5, 2022
The fearless Journey Begins in London!! #அச்சம்என்பதுஇல்லையே @NimishaSajayan
Prod by @SSSMOffl Rajashekar & Swathi@DoneChannel1 @shiyamjack pic.twitter.com/JQytNuGTOh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com