ரிலீசுக்கு தயாராகிய அருண்விஜய்யின் அடுத்த படம்.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Thursday,February 23 2023]

அருண் விஜய் நடித்த ’பார்டர்’ என்ற திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில் திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் அருண்விஜய்யின் இன்னொரு படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அருண் விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த திரைப்படம் ’அச்சம் என்பது இல்லையே’. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக தற்போது பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இது குறித்த புகைப்படத்தையும் பட குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

இதனை அடுத்து இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணியை முடித்துவிட்டு விரைவில் ரிலீஸ் செய்ய பட குழுவினர் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ள இந்த படத்தில் நிமிஷா சஜயன், அலெக்சாண்டர் கேஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் மே மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் அருண் விஜய் மற்றும் ஏஎல் விஜய் இருவருக்குமே இன்னொரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.