அருண்விஜய்யின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,December 29 2022]

அருண் விஜய் நடித்த ’யானை’ மற்றும் ’சினம்’ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அருண் விஜய் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய் நடிப்பில் அரவிந்த் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘பார்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு ஒரு வருடத்துக்கு முன்பே தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதம், அக்டோபர் மாதம் 2 முறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதன் பின்னர் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தின் புரமோஷன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் விஜய் ஜோடியாக ரெஜினா நடித்துள்ள இந்த படத்தில் பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்துள்ளனர். ’ஈரம்’ அறிவழகன் இந்த படத்தை இயக்கி உள்ளார். சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை ஆல் இன் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் யானை, சினம் படங்களுக்கு பின் இந்த படம் இந்த படம் அருண் விஜய்க்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து தனலட்சுமி எலிமினேட் செய்யப்படவில்லையா? ஹாட்ஸ்டார் பதிவால் பரபரப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி 80வது நாளை நெருங்கி வரும் நிலையில் வீட்டிற்குள் இருக்கும் 9 போட்டியாளர்கள் மத்தியில் தற்போது கடும் போட்டி நிலவுகிறது என்பதும், இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்பதை

நடுரோட்டில் கணவர் முன் சுட்டுக்கொல்லப்பட்ட பிரபல நடிகை: வழிப்பறி கொள்ளையர்களின் அட்டகாசம்!

வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் நடுரோட்டில் பிரபல நடிகை ரியா குமார் என்பவர் அவரது கணவர் முன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை நீங்க எதிர்பார்க்கவே இல்லையில... கதிரவனை பார்க்க வந்த இந்த இளம்பெண் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

எடப்பாடியார் ஆதரவாளர்களுக்கு வீடு கிடையாது: போர்டு எழுதிய மாட்டிய தமிழ் நடிகர்!

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு வீடு கிடையாது என தமிழ் நடிகர் ஒருவர் வாடகைக்கு வீடு விடப்படும் என்ற போர்டில் எழுதி மாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வெங்கட்பிரபு - நாக  சைதன்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன்