அருண் விஜய் பிறந்த நாளில் வெளியான சூப்பர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: இணையத்தில் வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் நடித்து வரும் 'அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அருண்விஜய் நடித்த ’யானை’ மற்றும் ’சினம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அருண்விஜய் ஒரு பெண் குழந்தையுடன் இருப்பது போன்ற போஸ்டர் உள்பட 2 போஸ்டர் வெளியாகி உள்ளது
இன்று அருண்விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த போஸ்டர் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks team #AchchamEnbadhuIllayae & Dir #Vijay Sir for surprising me on my b’day with this fantastic poster. More exciting updates soon!!@iamAmyJackson @NimishaSajayan@gvprakash
— ArunVijay (@arunvijayno1) November 19, 2022
Prod by @SSSMOffl Rajashekar & Swathi @shiyamjack @DoneChannel1 pic.twitter.com/rSrmO5bJMZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments