நடிகர் அருண்விஜய் மீண்டும் காயம்.. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் அருண் விஜய்க்கு கடந்த மாதம் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று தற்போது தான் குணமாகிய நிலையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
‘யானை’ ’சினம்’ ஆகிய வெற்றி படங்களை அடுத்து அருண் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ’அச்சம் என்பது இல்லையே’. ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எமிஜாக்சன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் உடற்பயிற்சி செய்யும்போது அருண்விஜய் காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தின் சண்டைக் காட்சிகளின் போது அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
என்னுடைய அனைத்து விதமான செயல்களுக்குப் பின்னால் இதுபோன்ற காயங்கள் இருப்பதை நீங்கள் காணலாம். ஆனால் எத்தனை முறை காயம் அடைந்தாலும் டூப் இன்றி சொந்தமாக ஸ்டண்ட் செய்வதையே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவருக்கு காயம் ஏற்பட்டது குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Behind all my hard-core actions you'll see on screen there are plenty of bruises like these... But still love doing my own stunts..?? Wait for the next on screen..????
— ArunVijay (@arunvijayno1) November 26, 2022
Luv you all..❤️#AchchamEnbadhuIllayae #actorslife #nothingcanstop pic.twitter.com/UqTcsOhuiS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com