அஜீத்-சூப்பர் ஸ்டார் வில்லன் படுகாயம். மருத்துவமனையில் அனுமதி
Send us your feedback to audioarticles@vaarta.com
வளர்ந்து இளம் நடிகர்களில் ஒருவரான அருண்விஜய், அஜீத்துடன் நடித்த 'என்னை அறிந்தால்' சூப்பர் ஹிட் ஆகி அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது என்பதை அனைவரும் அறிவோம். இந்நிலையில் ராம்சரண் தேஜாவுக்கு வில்லனாக அருண்விஜய் நடித்த 'புரூஸ்லீ' திரைப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸாகி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் 'சக்ரவியூகா' என்ற படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் அருண்விஜய் நடித்து வருகிறார். இது அருண்விஜய் நடிக்கும் முதல் கன்னடப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்திற்கான ஒரு ரிஸ்கான சண்டைக்காட்சியில் டூப் இன்றி அருண்விஜய் நடித்தபோது கண்ணாடித்துகள் அவருடைய முகத்தில் பட்டதால் படுகாயம் அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
முகம், மூக்குப்பகுதி, தாடை ஆகிய பகுதிகளில் அருண்விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை அருண்விஜய் தனது சமூக வலைத்தளத்திலும் உறுதிப்படுத்தியுள்ளார். மருத்துவர்கள் அவர் குறைந்தது பத்து நாட்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
எங்கேயும் எப்போதும், 'வலியவன்' படத்தை இயக்கிய சரவணன் 'சக்ரவியூகா' படத்தை இயக்கி வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout