close
Choose your channels

தீபாவளி ரேஸில் இணையும் அருண்விஜய்யின் ஆக்சன் படம்!

Sunday, September 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வரும் தீபாவளி திருநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ மற்றும் சிம்பு நடித்த ’மாநாடு’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அருண்விஜய் நடித்த ஆக்சன் திரைப்படம் ஒன்று இந்த பட்டியலில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’மாநாடு’ திரைப்படம் தீபாவளி அன்று ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அருண்விஜய் நடித்த ’வா டீல்’ என்ற திரைப்படம் நீண்ட காலமாக ரிலீசாகாமல் இருந்த நிலையில் தற்போது தீபாவளி அன்று ரிலீசாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டே ரிலீசுக்கு தயாராகி விட்ட ’வா டீல்’ திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தீபாவளி அன்று இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் ஜோடியாக கார்த்திகா நடித்திருக்கும் இந்த படத்தில் சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment