close
Choose your channels

அருண்விஜய்யின் 'தடம்' படத்தின் கச்சிதமான ரன்னிங் டைம்!

Tuesday, February 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிய 'தடம்' திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 138 நிமிடங்களே அதாவது இரண்டு மணி நேரம் 18 நிமிடங்களே ரன்னிங் டைம் ஆக உள்ளது. இதுவொரு ஆக்சன் படத்திற்கான கச்சிதமான ரன்னிங் டைமாக கருதப்படுகிறது

இரண்டு வித்தியாசமான வேடங்களில் அருண்விஜய் நடித்துள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையில், கோபிநாத் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இந்தர்குமார் தயாரித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment