close
Choose your channels

தமிழ்ப்புத்தாண்டில் தடம் பதிக்கும் 'தடம்'

Friday, March 2, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் கோலிவுட்டில் பிசியாகிவிட்ட நடிகர் அருண்விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'தடம்'. அருண்விஜய் நடித்த "குற்றம் 23" திரைப்படத்தை தயாரித்த ரெதான் - தி சினிமா பீப்பள் நிறுவனத்தின் இந்தர் குமார் தயாரித்துள்ள அடுத்த படமான "தடம்" திரைப்படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் உருவான "தடையறத்தாக்க" பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் "தடம்" படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது. படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது "தடம்" படத்தின் டப்பிங் இன்று துவங்கியது.

அருண்ராஜ் இசையில் கோபிநாத் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் மதன்கார்க்கில் பாடல்வரிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த படம் தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment