'அப்பதான் தப்பு பண்றவங்களுக்கு பயம் வரும்': அருண்விஜய்யின் 'சினம்' டீசர்

  • IndiaGlitz, [Monday,January 11 2021]

அருண் விஜய் நடிப்பில் ஜிஎன் குமரவேலன் இயக்கிய ’சினம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சற்று முன் ’சினம்’ படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘தப்பை கண்டு ஒவ்வொருத்தருக்கும் கோபம் வர வேண்டும், அவ்வாறு கோபம் வந்தால் தான் தப்பு செய்றவன் பயப்படுவான், பயப்படனும்’ என்ற வசனத்துடன் வெளியாகியுள்ள இந்த டீசரை பார்க்கும் போதே இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் வில்லன்களால் பாதிக்கப்பட்ட நாயகன் பழிவாங்கும் கதையம்சம் கொண்ட படம் என்றும் தெரியவருகிறது.

அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவில், ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மூவி ஸ்லைட்ஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருண்விஜய் ஏற்கனவே நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அக்னி சிறகுகள்’ மற்றும் அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அருண்விஜய் 31’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.