அருண்விஜய்யின் 'சினம்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? ரசிகர்கள் ஆச்சரியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருண் விஜய் நடித்த ‘சினம்’ திரைப்படம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘சினம்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக ரிலீசாகி வரும் பிரபல நடிகரின் படங்கள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் இருக்கும் நிலையில் ‘சினம்’ படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் கூட இல்லை என்பது தான் அந்த ஆச்சரியத்துக்கு காரணம்.
‘சினம்’ படத்தின் ரன்னிங் டைம் ஒரு மணி நேரம் 54 நிமிடங்கள் மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 4 நிமிடங்களும் இரண்டாவது பாதி வெறும் 49 நிமிடங்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் ஷபீர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக பாலக் லால்வானி நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர், வெங்கடேஷ், பாரதி உள்பட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் அருண்விஜய் நடித்த ’யானை’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த வெற்றிப்படமாக ’சினம்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Sinam @arunvijayno1 cop thriller!
— IndiaGlitz - Tamil (@igtamil) September 13, 2022
Runtime : 1 hr 54 mins
1st Half - 1 hrs 4 mins 52 sec
2nd half - 49 mins 24 sec@MSPLProductions @gnr_kumaravelan #Vijaykumar #PallakLalwani @kaaliactor @gopinath_dop @ShabirMusic @madhankarky @Muzik247in @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/faX2KaeAL6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com