அருண் விஜய்யின் 'சினம்' ரிலீஸ் குறித்து இயக்குனரின் முக்கிய அப்டேட்!

  • IndiaGlitz, [Sunday,June 27 2021]

நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘சினம்’. இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் சென்சாரில் ‘யுஏ’ சான்றிதழ் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படம் ஏப்ரல், மே மாதமே ரிலீஸ் ஆக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. மேலும் இந்த படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் ஜிஎன்ஆர் குமரவேலன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து கூறிய போது ‘சினம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. இந்த கொரோனா காலத்தில் தற்போது பாதுகாப்பான சூழ்நிலை மாறி வருவதை அடுத்து திரையரங்குகள் மிக விரைவில் திறக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ‘சினம்’ விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க வரும்’ என்று கூறியுள்ளார். இதனை அடுத்து விரைவில் அருண்விஜய்யின் ‘சினம்’ ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவில், ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மூவி ஸ்லைட்ஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது.

அருண்விஜய் ஏற்கனவே நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அக்னி சிறகுகள்’, அறிவழகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அருண்விஜய் 31’ மற்றும் ஹரி இயக்கத்தில் ஒரு அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

விஜய் படத்தை கிண்டல் செய்த நடிகர்: ரசிகர்களின் மீம்ஸ்களுக்கு பதிலடி!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் படத்தை கிண்டல் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகரை, தற்போது ரசிகர்கள் மீம்ஸ் மூலம் கேலி, கிண்டல் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த மீம்ஸ்களுக்கு

அமெரிக்காவில் இருந்து ரஜினி அழைத்தார்: வைரமுத்து டுவிட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் சென்றார் என்பதும் அங்கு அவர் சில நாட்கள் தங்கியிருந்து உடல் பரிசோதனை

டயாபடிக் நோயாளிகளும் இனி மாம்பழம் சாப்பிடலாம்… சுவீட் இல்லாத புது வரவு!

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அதிகம் உள்ள எந்தப் பொருளையும் சாப்பிட முடியாமல் ஏங்குவதைப் பார்த்து இருப்போம்.

கொரோனா பீதியில் பெற்ற மகளையே 15 முறை கத்தியால் குத்திய தாய்… கோரச் சம்பவம்!

லண்டனில் தன் கணவருடன் வசித்துவந்த 36 வயதான தமிழ்ப்பெண் ஒருவர் கொரோனா நேரத்தில் இறந்து விடுவோம் என நினைத்து கடும் மனஅழுத்ததிற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

  முதியவருக்கு 10 மாதத்தில் 43 முறை கொரோனா பாதிப்பு? பீதியைக் கிளப்பும் கோரச் சம்பவம்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கடந்த 10 மாதங்களில் 43 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மருத்துவர்களை கடும் அச்சத்தில்