ஒரு கொலைக்கு என்ன எல்லாம் காரணம் இருக்கும்? அருண்விஜய்யின் 'சினம்' டிரைலர்

  • IndiaGlitz, [Wednesday,August 31 2022]

அருண் விஜய் நடித்த ’யானை’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ’சினம்’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

காவல்துறை அதிகாரி கேரக்டரில் நடிக்கும் அருண் விஜய் மர்மமாக நடந்த ஒரு கொலையை விசாரணை செய்த போது கிடைக்கும் திடுக்கிடும் தகவல்கள், அதன்பின் அவர் கொலையாளியை கண்டுபிடிக்க எடுக்கும் நடவடிக்கைகள் தான் இந்த படத்தின் கதை என்பது இந்த ட்ரெய்லரில் வருகிறது.

இரண்டு நிமிட டிரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், குடும்ப செண்டிமெண்ட் காட்சிகள் மற்றும் த்ரில் காட்சிகள் இருப்பதால் இந்த படம் அருண்விஜய்யின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் ஷபீர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக பாலக் லால்வானி நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஆர்.என்.ஆர் மனோகர், வெங்கடேஷ், பாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

More News

உங்க மனசுக்கு பிரதமரே நேரில் சந்திப்பார்.. ரஜினி வீட்டுக்கு சென்ற 'குக் வித் கோமாளி' ஸ்ருதிகா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு 'குக் வித் கோமாளி' சீசன் 3 டைட்டில் வின்னர் ஸ்ருதிகா சென்ற நிலையில் அதுகுறித்து வீடியோவை தனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

நடிகர் ஆனந்த்ராஜை அலறவிட்ட 'கோப்ரா' டீம்!

விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன என்பதும் இந்த படம் விக்ரமின் வெற்றிப்படம் என்பது உறுதி செய்யப்பட்டு

ஒரு பைசா செலவில்லாமல் ஹனிமூன்? நயன் - விக்கியின் வேற லெவல் பிளான்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நிலையில் திருமணச் செலவு முழுவதையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும்

மகனுடன் 'கோப்ரா' படம் பார்த்த விக்ரம்: ரசிகர்கள் உற்சாகம்!

விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. சென்னை உள்பட பல முக்கிய

தளபதி விஜய் 'அதை' ஒருபோதும் பண்ணமாட்டார்: விக்ரம் தெரிவித்த ஆச்சரிய தகவல்

விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.