அருண் விஜய்யின் அடுத்த படம்.. சூப்பர் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

நடிகர் அருண் விஜய் நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததை அடுத்து, படக்குழுவினர் ஒரு சூப்பர் வீடியோவை வெளியிட்டுள்ளனர், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் நடித்த 'மிஷின் சாப்டர் ஒன்’ என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியான நிலையில், பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ’வணங்கான் ’என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும், இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அருண் விஜய் கடந்த சில மாதங்களாக ’ரெட்டை தல’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக, இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் பி.டி.ஜி யுனிவர்சல் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, 47 வினாடிகள் கொண்ட சூப்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் அருண் விஜய் படப்பிடிப்பு முடிந்தது என்று கூறும் காட்சி, படப்பிடிப்பு நடந்த லொகேஷன் காட்சியும் அழகாக இடம் பெற்றுள்ளன. கிறிஸ் திருக்குமரன் இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையில் உருவாகிய இந்த படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதுடன், படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.