close
Choose your channels

அருண் விஜய்யின் 'ரெட்ட தல'.. சூப்பர் அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகம்..!

Monday, April 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் விஜய்யின் 36 வது திரைப்படமான ’ரெட்ட தல’ என்ற படம் குறித்த அறிவிப்பு கடந்த ஒரு வாரத்திற்கு முன் வெளியான நிலையில் தற்போது அந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை அருண் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

அருண் விஜய் நடிப்பில் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் ’ரெட்ட தல’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக அருண் விஜய் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் என்ற வரிகளுடன் கூடிய புதிய போஸ்டரை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அருண் விஜய் இரண்டு முக்கியமான கேரக்டரில் நடக்கும் இந்த படத்தில் நாயகியாக சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தடம்’ திரைப்படத்திற்கு பிறகு அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment