அருண் விஜய்யின் 'மிஷன் சாப்டர் 1' : த்ரில்லிங்கான மேக்கிங் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருண் விஜய் நடிப்பில், ஏ எல் விஜய் இயக்கத்தில், ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படம் உருவாகி வந்த நிலையில் இந்த படத்தின் உரிமையை லைகா நிறுவனம் பெற்ற பிறகு ‘மிஷன் சாப்டர் 1’ என்ற டைட்டில் மாற்றப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது லைகா நிறுவனம் சற்றுமுன் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இங்கிலாந்து நாட்டில் உள்ள சிறையில் எடுக்கப்பட்ட திரில்லிங்கான காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
சிறைக்கைதியாக அருண் விஜய், சிறைத்துறை அதிகாரியாக எமி ஜாக்சன் நடித்த அதிரடி ஆக்சன் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளது. மேலும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்றும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அலெக்சாண்டர் கேஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு. ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
Heart-stopping stunts 🤯 High-octane action sequences 👊🏻💥 all packed with mystery and thrills!⚡ This is one MISSION you don't want to miss! #MissionChapter1 Starring 🌟 @arunvijayno1 and Directed by 🎬 #Vijay COMING SOON! 🚨
— Lyca Productions (@LycaProductions) July 7, 2023
🌟 @iamAmyJackson @NimishaSajayan @AbiHassan_
🎶… pic.twitter.com/SOE5QvRsHX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com