மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட 'பார்டர்' ரிலீஸ்.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

  • IndiaGlitz, [Tuesday,February 21 2023]

அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவான ‘பார்டர்’ என்ற திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அருண் விஜய் நடித்த ‘பார்டர்’ திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் ஏற்கனவே ஒரு சில முறை ரிலீஸ் செய்து அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ‘பார்டர்’ திரைப்படம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் அருண்விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பாதுகாப்பு புலனாய்வு அதிகாரி அர்விந்த் சந்திரசேகர் என்ற கேரக்டரில் அருண் விஜய் நடித்த இந்த படத்தில் ரெஜினா நாயகியாக நடித்துள்ளார். சாம் சிஎஸ் இசையமைப்பில், ராஜசேகர் ஒளிப்பதிவில், பாபு ஜோசப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் அருண் விஜய் தற்போது ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். எமி ஜாக்சன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More News

சிபிராஜின் 2ஆம் பாக திரைப்படம்.. பான் இந்தியா படமாக்க திட்டம்..!

 சிபிராஜ் நடித்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தை பான் இந்தியா திரைப்படமாக உருவாக்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

தோனியின் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' குறித்த முக்கிய அறிவிப்பு..!

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் 'எல்.ஜி.எம்.  ரமேஷ் தமிழ்மணி

'லவ் டுடே' படத்தின் அடுத்த லெவல்.. அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட அர்ச்சனா கல்பாதி..!

'கோமாளி' இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான 'லவ் டுடே' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட

ரூ.1000 கோடி வசூலை எட்டிய 'பதான்'.. இதற்கு முன் 1000 கோடி வசூலித்த படங்கள் என்னென்ன?

 ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படம் கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியான நிலையில் ஒரே மாதத்தில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடி என்ற வசூல் சாதனையை எட்டியுள்ளது 

மகன் அமீனுடன் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்.. விறுவிறுப்பான படப்பிடிப்பு..!

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் தனது மகன் அமீன் உடன் நடிக்கும் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில்