ஒரே தலைப்பில் இரண்டு படங்கள்: அருண்விஜய் படத்திற்கு தடை கேட்டு வழக்கு!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருண் விஜய் நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படத்தின் டைட்டிலில் வேறு ஒரு தயாரிப்பாளரும் அதே தலைப்பில் படத்தை தயாரித்து ரிலீசுக்கு தயாராக வைத்திருப்பதால் தற்போது இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்று உள்ளது.
நடிகர் அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’பார்டர்’. இந்த படம் கடந்த மே மாதமே ரிலீசுக்கு தயாரானது என்பதும் திரையரங்குகள் திறப்பதற்காக இந்த படம் காத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த மாதம் திரையரங்குகள் திறந்த நிலையில் இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டோனி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் சார்லஸ் ஆண்டனி சாம் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தான் ஏற்கனவே ’பார்டர்’ என்ற டைட்டிலில் ஒரு படத்தை தயாரித்து உள்ளதாகவும், இந்த படத்தின் டைட்டிலை தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தணிக்கை சான்றிதழ் பெற்று படத்தை ரிலீஸ் செய்ய தயார் நிலையில் இருக்கும்போது ’பார்டர்’ என்ற தலைப்பில் அருண்விஜய் நடித்த படம் ஒன்றும் ரிலீசுக்கு தயாராக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், இந்த படம் வெளியானால் தனக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என்றும் அதனால் ’பார்டர்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள அருண் விஜய்யின் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் அருண் விஜய் நடித்த ’பார்டர்’ படத்தின் தயாரிப்பாளர், தணிக்கைக்குழு, திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments