அருண்விஜய்யின் 'யானை' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அருண் விஜய் நடித்த ‘யானை’ திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யானை’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் ‘யானை’ படத்தின் ரிலீஸ் தேதி மே 6-ஆம் தேதி என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விநியோகிஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜூன் 17ஆம் தேதி என ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
From June 17th .. a #hari film ….#Yaanai #YannaifromJune17@arunvijayno1 #DirectorHARI @DrumsticksProd @priya_Bshankar @realradikaa @iYogibabu @thondankani @Ammu_Abhirami @gopinath_dop @KKRCinemas @ertviji @ZEE5Tamil @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/1t9jhFw6Gi
— G.V.Prakash Kumar (@gvprakash) April 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com