close
Choose your channels

அருண் விஜய்யின் 'யானை' ரிலீஸ் தள்ளி போகிறதா?

Sunday, June 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அருண் விஜய் நடிப்பில் உருவான ‘யானை’ திரைப்படம் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்நிலையில் ‘யானை’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இந்த படம் இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் 800 திரையரங்குகளில் வெளியாகி அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ‘யானை’ திரைப் படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கவில்லை.

ஆனால் அதே நேரத்தில் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட ஆர்ஜே பாலாஜி ’வீட்ல விசேஷம்’ படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர். டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment