பாக்ஸர்' பட ஃபர்ஸ்ட்லுக்கை பார்த்து வருத்தப்பட்டேன்: அருண்விஜய்

  • IndiaGlitz, [Friday,July 05 2019]

அருண்விஜய் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'பாக்ஸர்' திரைப்படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியானது. இருப்பினும் போஸ்டர் வித்தியாசமானதாக இருந்ததால் அருண்விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த போஸ்டருக்க்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் முன்னறிவிப்பின்றி 'பாக்ஸர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் குறித்து அருண்விஜய் கூறியபோது, 'இந்த படத்தின் போஸ்டர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியானதில் எனக்கு ரொம்ப வருத்தம். ஏனெனில் இந்த படம் இப்போதைக்கு ரிலீஸ் செய்யப்படும் படம் இல்லை. நன்றாக டைம் எடுத்து உருவாக்க வேண்டிய படம் இது. கதையின் போக்கு அப்படி. நானும் எனது 100% உழைப்பை இந்த படத்திற்காக கொடுத்து வருகிறேன். தற்போது 'மாஃபியா' படத்தின் படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கின்றது. அது முடிந்த பின்னர்தான் 'பாக்ஸர்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும்

ஆனால் இந்த படத்தின் போஸ்டர் திடீரென ரிலீஸ் ஆனதற்கான காரணம் எனக்கு தற்போதுதான் தெரிய வந்தது. நேற்று மாலை இந்த போஸ்டர் இணையத்தில் கசிந்துவிட்டது. அதனை தடுத்து நிறுத்த படக்குழுவினர் எவ்வளவு முயற்சி செய்தும் தொடர்ந்து வைரலானதால் முடியவில்லை. எனவே வேறு வழியின்றி அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்யப்பட்டது. முன்னறிவிப்பின்றி ரிலீஸ் செய்தபோதிலும் இந்த படத்தின் போஸ்டருக்கு நீங்கள் கொடுத்த அபாரமான ஆதரவுக்கு எனது நன்றி என்று அருண்விஜய் கூறியுள்ளார்