மிஸ்டர் லோக்கல் படத்தை விமர்சனம் செய்தாரா அருண்விஜய்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே பெரும்பாலான விமர்சனங்கள் கூறுகின்றன. ராஜேஷ் எம் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சமிருக்காது. குறிப்பாக சந்தானம் காமெடி அவரது படத்தில் களை கட்டும். ஆனால் சந்தானம் இல்லாத குறையை நான்கு காமெடி நடிகர்கள் இருந்தும் நிரப்ப முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக உள்ளது.
இந்த நிலையில் 'மிஸ்டர் லோக்கல்' வெளியான நேற்று நடிகர் அருண்விஜய் ஒரு ஸ்மைலியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது மிஸ்டர் லோக்கல் படத்தை அவர் கிண்டல் செய்வதாகவே ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அருண்விஜய் இன்னொரு டுவிட்டில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. அதுசம்பந்தமான டுவீட் தான் எனது முந்தைய டுவீட். தயவுசெய்து யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நான் இந்த தொழிலை மிகவும் நேசிப்பதால் என்னுடைய பணியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
Hi guys..
— ArunVijay (@arunvijayno1) May 17, 2019
Its confirmed officially!
My next project announcement is going to be out next week..
The previous tweet was regarding this.
Please dont misinterpret????
I am just focussing only on my work which I really love. Thank you..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments