மிஸ்டர் லோக்கல் படத்தை விமர்சனம் செய்தாரா அருண்விஜய்?

  • IndiaGlitz, [Saturday,May 18 2019]

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்று வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே பெரும்பாலான விமர்சனங்கள் கூறுகின்றன. ராஜேஷ் எம் படம் என்றாலே காமெடிக்கு பஞ்சமிருக்காது. குறிப்பாக சந்தானம் காமெடி அவரது படத்தில் களை கட்டும். ஆனால் சந்தானம் இல்லாத குறையை நான்கு காமெடி நடிகர்கள் இருந்தும் நிரப்ப முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக உள்ளது.

இந்த நிலையில் 'மிஸ்டர் லோக்கல்' வெளியான நேற்று நடிகர் அருண்விஜய் ஒரு ஸ்மைலியை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது மிஸ்டர் லோக்கல் படத்தை அவர் கிண்டல் செய்வதாகவே ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டது. 

இதனையடுத்து அருண்விஜய் இன்னொரு டுவிட்டில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். என்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. அதுசம்பந்தமான டுவீட் தான் எனது முந்தைய டுவீட். தயவுசெய்து யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். நான் இந்த தொழிலை மிகவும் நேசிப்பதால் என்னுடைய பணியில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
 

More News

வித்தியாசமான கெட்டப்பில் ஜெயம் ரவி: கோமாளி ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவான 'கோமாளி' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

உலகம் அழியப்போகிறதா..? பூமியில் விழுந்த ராட்சத ஓட்டை!

இந்த உலகம் அழிவை நோக்கி செல்கிறதா? என்கிற பய உணர்வை ஏற்படுத்தியுள்ளது, சின்க்ஹோல் எனப்படும் ராட்சத ஓட்டை...

கமல்ஹாசனை காலணியால் அடித்தவருக்கு பொன்னாடை போர்த்திய எச்.ராஜா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தில் ஒப்பந்தமான 3வது நாயகி!

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் எழில் இயக்கி வரும் திரைப்படத்தில் ஏற்கனவே ஈஷா ரெபா மற்றும் நிகிஷா பட்டேல் ஆகிய இரண்டு நாயகிகள் நடித்து வரும் நிலையில்

கார்த்தியின் கைதியும் 62 இரவுகளும்..

கார்த்தி நடிப்பில் 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளது.