பாலாவின் 'வணங்கான்' படம் குறித்த சூப்பர் அப்டேட்.. அருண் விஜய்யின் நெகிழ்ச்சியான பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் வந்துள்ள நிலையில் அருண் விஜய்யையும் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான ஒரு பதிவை செய்துள்ளார்.
பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ என்ற திரைப்படம் சூர்யா நடிப்பில் முதலில் உருவாகி அதன் பிறகு சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடிப்பில் இந்த படம் உருவாகி வந்த நிலையில் விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து படக்குழுவினர் அனைவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் உடனே தொழில்நுட்ப பணிகளும் தொடங்கப்படும் என்றும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள அருண் விஜய் அதில் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது, பாலா சார் அவர்களுடன் பணியாற்றியது எனக்கு ஒரு மிகப்பெரிய மரியாதை மற்றும் அதிர்ஷ்டம் என்றுதான் கூறுவேன். உண்மையில் அவரது இயக்கத்தில் நடித்தது ஒரு விலைமதிப்பு இல்லாத அனுபவம் தான். என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு படத்தில் அதுவும் அவர் கொடுத்த ஒரு அசாதாரமான கேரக்டரை முடித்ததில் எனக்கு மகிழ்ச்சி.
எனது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமுத்திரக்கனி, மிஷ்கின், ஜிவி பிரகாஷ் ,ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா ஆகியோர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். அருண் விஜய்யின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
IT'S A WRAP for #VANANGAAN!! Thank you #Bala Sir, it has been an honour and privilege to have worked with you, a truly priceless experience. Feeling the exhilaration on the completion of an extraordinary character in a project very close to my heart. Thank you to my Producer… pic.twitter.com/f4ikfymbZT
— ArunVijay (@arunvijayno1) April 12, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments