திரையரங்கில் சூப்பர்ஹிட்டான 'யானை' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ‘யானை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ஜீ5 ஓட்டி தளத்தில் வெளியாகி இருப்பதாகவும் அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி5 தளத்தில் அடுத்த அதிரடி வெளியீடாக, நடிகர் அருண் விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் ‘யானை’ ஆகஸ்ட் 19, 2022 அன்று வெளியாகிறது
ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 19, 2022 முதல், இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்த "யானை" என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.
அருண் விஜய்-ப்ரியா பவானி ஷங்கர் நடித்த “யானை” திரைப்படம், ஆகஸ்ட் 19, 2022 அன்று திரையிடப்படும் என்று ஜீ5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன், வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள், பிளாக்பஸ்டர் மற்றும் கமர்ஷியல் எண்டர்டெயினர் படங்களை தந்த இயக்குனர் ஹரி எழுதி இயக்கியுள்ள இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ5 தளம் தற்போது இந்த ஆக்ஷன் நிறைந்த, உணர்ச்சிகரமான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தை, ஒவ்வொரு இல்லங்களுக்கும் கொண்டு வருகிறது.
இப்படத்தில் பல அற்புதமான புதுமையான முயற்சிகள் நிகழ்த்தப்பட்டிருந்தது, அவற்றில் அருண் விஜய் நிகழ்த்திய சிங்கிள்-ஷாட் ஆக்ஷன் சீக்வென்ஸ் ரசிகர்களிடம் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தவிர, இயக்குனர் ஹரியின் வலுவான கம்பேக்கிற்காக “ யானை” பாராட்டை பெற்றது குறிப்பிடதக்கது. பொதுவாக இயக்குநர் ஹரி தன் திரைப்படங்களில் ஆக்ஷன், உணர்வுகள், காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப அம்சங்களை சரியான கலவையுடன் தந்து, பார்வையாளர்களின் நாடித் துடிப்புக்கு ஏற்ப பொழுது போக்கை வழங்குவதில் பாராட்டைப் பெறுபவர். மேலும் இப்படத்தில், ஜீவி பிரகாஷ் குமாரின் இசையமைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒட்டு மொத்த நட்சத்திர நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு கதைக்கு மேலுமொரு பேரலங்காரமாக அமைந்திருந்தது.
ஜீ5 தொடர்ந்து சிறந்த உள்ளடக்கம் கொண்ட அசல் தொடர்களை வழங்கி வருகிறது. விலங்கு, அனந்தம், ஃபிங்கர் டிப் மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கி சமீபத்தில் வெளியான பேப்பர் ராக்கெட் என அனைத்து தொடர்களும் ரசிகர்களிடம் பெரிய பாரட்டுக்களை பெற்றது. பல தரமான படைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களில் சிறந்த படைப்புகளை தந்து, ஜீ5 அதன் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுதுபோக்குகளை வழங்கி வருகிறது.
Power packed #Yaanai in 3 days only on #Zee5
— ZEE5 Tamil (@ZEE5Tamil) August 16, 2022
.#Yaanai premieres Aug 19th only on ZEE5 App!
.#ZEE5 #ZEE5tamil #Yaanai #YaanaiOnZEE5
.@arunvijayno1 @priya_Bshankar @Ammu_Abhirami @VijaytvpugazhO @realradikaa @thondankani @gvprakash @iYogiBabu @DirectorBose @kavingarsnekan pic.twitter.com/HvXYNb8EzD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments