அருண் விஜய்யின் 'யானை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,February 27 2022]

அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘யானை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன .

இந்த நிலையில் ‘யானை’ படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் மே 6ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மே மாதத்தில் சிவகார்த்திகேயனின் டான் உள்பட ஒருசில முக்கிய திரைப்படங்கள் வெளியாகும் நிலையில் அந்த வரிசையில் ‘யானை’ திரைப்படமும் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் ராதிகா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது டிரம்ஸ்டிக் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.